எகிப்து வெங்காயம் இந்தியாவுக்கு வருகிறது!

Report

எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு 17 ஆயிரம் டன் வெங்காயங்கள் இறக்குமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 க்கும் மேலாக விற்கப்படுவதால் எளிய மக்கள் அவதியில் உள்ளனர். மேலும் ஆங்காங்கே வெங்காய திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், எகிப்திலிருந்து 6,090 டன் வெங்காயங்களும், துருக்கியிலிருந்து 11,000 டன் வெங்காயங்களும் ஜனவரி முதல் வாரத்திற்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வெங்காய தட்டுபாடு ஓரளவு சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

941 total views