பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - உணவு ஊட்டியபோது நேர்ந்த துயரம்!

Report

தமிழத்தின், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பகுதியில் உள்ள கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் சையது அபுதாகீர் - மும்தாஜ் தம்பதியினர்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சையது அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

சையது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது மாடியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் தாய் மும்தாஜ் தனது ஒன்றரை வயது குழந்தையான இர்பானுக்கு அவரது வீட்டின் பால்கனியில் குழந்தையை விளையாட விட்டு உணவு கொடுத்துள்ளார்.

அப்போது மும்தாஜுக்கு செல் போனில் அழைப்பு வந்துள்ளது. உடனே அவர் அதில் பிஸியாக பேசி கொண்டுள்ளார்.

அப்போது அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்துள்ளது.

உடனே ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையின் பெற்றோர் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்துள்ளது.

குழந்தை அருகில் தான் விளையாடிக்கொண்டிருக்கிறது என்று அலட்சியமாக தாய் இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர்.

2053 total views