சீனாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 6 பேருக்கு நேர்ந்த சோகம்

Report

சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்திற்கு பேருந்து தலை குப்புற கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

கிங்காய் மாகாணத்தின் தலைநகரான ஜைனிங்கில் (Xining) சாலையில் திடீரென பல அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டதில், அவ்வழியாக வந்த பேருந்து ஒன்று அதில் கவிழ்ந்தது.

பேருந்தில் பயணம் செய்தவர்களும், பாதசாரிகள் பலரும் பள்ளத்தில் விழுந்து மாயமானார்கள்.

பள்ளத்தில் விழுந்தவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

228 total views