செல்ஃபி எடுக்க முயன்ற இளம் மொடல் அழகிக்கு நேர்ந்த சோகம்!

Report

பிரித்தானியாவின் இளம் மொடல் அழகி ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல செல்ஃபி எடுக்குமிடமான டயமண்ட் பே பகுதியில் பாறையிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

மடலின் டேவிஸ் (21) என்ற அழகியே நேற்று இவ்வாறான முறையில் உயிரிழந்துள்ளார். சூரிய உதயத்தை காண நண்பர்களுடன் அந்த பகுதிக்கு சென்ற போதே, இந்த அனர்த்தத்தை எதிர் கொண்டார்.

மடலின் கடந்த ஆண்டு பிற்பகுதியில் இங்கிலாந்தின் லிங்கனில் இருந்து அவுஸ்திரேலியா வந்து அங்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டிருந்தார்.

நேற்று முன்தினம், இரவு வாக்ளூஸில் ஒரு விருந்தில் கலந்து கொண்டிருந்தார். அருகிலுள்ள 30 மீட்டர் (100 அடி) டயமண்ட் பே பாறைகளுக்கு ஏழு நண்பர்களுடன் காலை 6.30 மணியளவில் சென்றார்.

இதன் போதே, குன்றிலிருந்து தவறிழுந்து உயரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

932 total views