விடுதியின் சுவரை தாண்டி மாங்காய் திருட வந்த யானை! வேகமாக பரவும் செய்தி

Report

சாம்பியாவில் மாங்காய் சாப்பிடுவதற்காக தங்கும் விடுதியின் சுவரை தாண்டிய யானையின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

யானைகள் பெரும்பாலும் புல், தழைகள், பூக்கள், காடுகளில் உள்ள சில வகையான பழங்கள், புதர்ச்செடிகள், மூங்கில் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிடுகின்றன.

அவற்றின் முக்கிய உணவு புற்கள். ஆனால், வானிலை வறண்டு, புற்கள் மடிந்து விட்டால், காட்டில் காணக்கூடிய எந்த வகையான தாவரங்களையும் யானைகள் சாப்பிடுகின்றன.

சில சமயங்களில் தனக்கு பிடித்த உணவுக்காக, வேலியைக்கூட தாண்டி ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில், சாம்பியாவில் மாங்காய் சாப்பிடுவதற்காக, அங்குள்ள ஒரு தங்கும் விடுதியின் சுவரை தாண்டிய யானையின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாம்பியா நாட்டின் தெற்கு லுங்வா தேசிய பூங்கா பகுதியில் உள்ளது எம்ஃபுவே தங்கும் விடுதி. சம்பவத்தன்று ஆப்பிரிக்க யானை ஒன்று விடுதியின் சுவரை தாண்டி உள்ளே வந்தது.

இதைக்கண்ட அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த யானை கீழே தடுமாறி விழாமல் தனது மிகப்பெரிய 4 கால்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து சுவரை தாண்டியது.

இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து, அந்த விடுதியின் மேலாளர் கூறுகையில் யானை மிகவும் நேர்த்தியான வழியை தேர்ந்தெர்டுத்து உள்ளே வந்தது.

சுவரை தாண்டிய யானையின் யோசனையைக் கண்டு சுற்றுலாப்பயணிகள் வியந்தனர். அந்த யானை இங்குள்ள மாம்பழங்களை சாப்பிட வந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

விடுதியின் சுவரை தாண்டி உள்ளே வந்த யானை திரும்பிச் செல்வதற்கு முன்பு சில மாங்காய்களை திருடி சாப்பிட்டதாக அங்குள்ள ஊழியர்கள் சிலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

1024 total views