திருமணமானவர்கள் பாதிரியாராக பணியாற்ற எதிர்ப்பு!

Report

திருமணம் செய்து கொண்டவர்கள் பாதிரியார்களாக வேலை செய்வதற்கு முன்னாள் போப் பெனடிக்ட் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள புத்தகத்தில் , பாதிரியார்களாக வேலைக்கு வருபவர்கள் பிரம்மச்சரியத்தை விடவும் திருமணத்தினால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிறிஸ்துவிடம் தம்மை அர்ப்பணிப்பதே பாதிரியார்களுக்கு அடிப்படையாகும்.

திருமணம் என்பது குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணிப்பது எனக் குறிப்பிட்டுள்ள பெனடிக்ட், இவை இரண்டும் எப்போதும் ஒன்றாகச் செயல்பட முடியாது எனவும் தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, கடவுள் திருப்பணி மேற்கொள்வதற்கு திருமணத்தைத் துறப்பது அடிப்படையாகும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கினி நாட்டு கார்டினல் ராபர்ட் சாராவுடன் இணைந்து அவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் பிரான்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்தன.

673 total views