மேகன் தம்பதியினர் அரசக் குடும்பத்தில் வெளியேற காரணம்? வில்லியம், ஹாரி மறுப்பு

Report

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் கொடுமை போக்கால் தான் அரசக் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்திக்கு சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹாரி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்தித்தாள் ஒன்றில், ஹாரியின் மனைவி மேகனிடம் இளவரசர் வில்லியம் நட்புடன் இல்லை என்றும் அவரின் கொடுமையான போக்கால் தான் ஹாரி தம்பதி அரசக் குடும்பத்தில் வெளியேறியதாகவும் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து வில்லியம் மற்றும் ஹாரி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அதிக அக்கரை கொண்டுள்ள சகோதரர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் இந்த செய்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது போன்ற தவறான செய்தி மிகவும் ஆபத்தானவை என்றும் கூறியுள்ளனர்.

1941 total views