சவுதியில் 184 பேருக்கு தூக்குத் தண்டனை!

Report

சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு காரணங்களுக்காக 184 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரிப்ரீவ் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு அளித்துள்ள புள்ளி விபரப்பட்டியலில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்டினர் என்றும், 90 பேர் வெளிநாட்டினர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் எந்த நாட்டினர் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் ரிப் ரீவ் தெரிவித்துள்ளது.

இதில் உச்சகட்டமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் நாள் ஒரே நாளில் 37 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்றும் அதில் 3 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகம் என்றும் ரிப்ரீவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

2086 total views