மனைவியின் உடலின் தோலை உரித்து பாகங்களாக்கிய கொடூர கணவன்!!

Report

மெக்சிகோவில் மனைவியை கொடூரமாக கொலை செய்து, தோலை உரித்து ஏரியில் வீசிச் சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோவை சேர்ந்த 46 வயதுடைய நபரொருவர், தனது 25 வயதுடைய மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இதன்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த நபர், தனது மனைவியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார்.

இதனால், சம்பவ இடத்திலேயே மனைவி இறந்தபின்னர், மனைவியின் உடல் தோலினை உரித்து, உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக வெட்டி, ஏரியில் வீசியுள்ளார்.

அடையாளங்காண முடியாத படி சடலத்தை அப்புறப்படுத்திய பின்னர், தனது முதல் மனைவிக்கு தொலைபேசி வாயிலாக நடந்தவற்றை தெரியப்படுத்தியுள்ளார்.

இதனைகேட்டு அதிச்சி அடைந்த முதல் மனைவி, சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து , சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில், நடந்தவற்றை அவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை , தோல் உரிக்கப்பட்ட நிலையிலிருந்த குறித்த பெண்ணின் சடலத்தை புகைப்படமெடுத்து அந்நாட்டு ஊடகங்கள் பயன்படுத்தியமைக்கு மெக்சிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

6364 total views