கொரோனா பீதி ...கைவிட்ட நாடுகள்... அடைக்கலம் கொடுத்த கம்போடியா! மகிழ்ச்சியில் பயணிகள்

Report

பல்வேறு அரசாங்கங்களுடனான வேண்டுகோளுக்குப் பிறகு, வெஸ்டர்டாம் சொகுசு கப்பல் இறுதியாக கம்போடியாவின் சிஹானுக்வில்லில் உள்ள ஒரு துறைமுத்துக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது கடந்த சில நாட்களில் தாய்லாந்து, தைவான், குவாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணித்தபோதும் அங்கு கப்பலை நிறுத்துவதற்கான அனுமதி கொரோனா பீதியால் மறுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கப்பலில் இல்லாவிட்டாலும் ஏனைய கப்பல்களில கொரோனா தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக அந்த கப்பலை மேற்படி நாடுகளில் நங்கூரமிட அனுமதி மறுக்கப்பட்டது.

இதன் பின்னர் கப்பலில் பயணித்த பயணிகள் யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என தெரிந்ததும், இவ்வாறு கம்போடிய மண்ணில் அவர்கள் தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெஸ்டர்டாம் கப்பலில் 802 பணியாளர்கள் உட்பட மொத்தமாக 2000 க்கும் மேற்பட்டோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

10101 total views