தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட இரு ரஷ்ய பெண்கள் தப்­பி­யோட்டம்

Report

ரக்ஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் கார­ண­மாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இரு ரஷ்ய பெண்கள் தாம் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து பெரும் போராட்­டத்தின் மத்­தியில் தப்பிச் சென்­றுள்­ளனர்.

மேற்­படி பெண்கள் அண்­மை­யில் குடும்­பத்­தி­ன­ரு­டன்­ சீனா­வுக்கு பய­ணத்தை மேற்­கொண்டு நாடு திரும்­பி­யி­ருந்­தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் ரஷ்ய சென்­பீற்­றர்ஸ்பேர்க் நக­ரி­லுள்ள வைத்தியசாலையி­லி­ருந்து வெவ்­வெ­றாக தப்­பிச்­சென்றனர்.

இதனையடுத்து குறித்த இரு­வரும் தாம் வைத்தியசாலையி­லி­ருந்து தப்பி வந்­தமை குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றம் செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அவர்­களில் குஸெல்­நெடர் என்ற பெண்ணின் மகன் கடும் காய்ச்சல் மற்றும் இரு­ம­லுக்­குள்­ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து குஸெல்நெடரையும் வை்த்தியசாலையில் அனுமதிக்க அதிகாரிகளால் பணித்துள்ளனர்.

1751 total views