வடகொரியாவின் இரக்கமற்ற செயல்- கொரோனா பீதியால் வர்த்தக அதிகாரி சுட்டுக்கொலை!

Report

வடகொரியாவில் கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் , பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியாவைச் சேர்ந்த ஒரு மூத்த வர்த்தக அதிகாரி ஒருவர் அண்மையில் சீனாவுக்கு சென்று வந்தார்.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் எந்த முன் அனுமதியின்றி பொது குளியலறைக்கு அதிகாரி சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக அவரை கைது செய்த வடகொரிய அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை , வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பில் பணிபுரிந்து மற்றொரு அதிகாரி, அண்மையில் சீனாவுக்கு சென்று வந்ததை மறைத்துள்ளார்.

இதைக் கண்டறிந்த வடகொரிய அதிகாரிகள், அவரை உடனடியாக பதவியிறக்கம் செய்து, தோட்ட வேலைக்கு மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

4075 total views