காச நோய் தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துமா

Report

காச நோயை குணப்படுத்துவதற்காக நூறு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பி.சி.ஜி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியுமா என விஞ்ஞானிகள் தற்போது பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1920 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசி மூலம் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை குறைக்க முடியுமா என ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் கொவிட் 19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் முக்கிய சுகாதார ஊழியர்கள் நான்காயிரம் பேரை பயன்படுத்தி பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை ஜேர்மனியில் வயது முதிர்ந்த நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், நெதர்லாந்தின் சுகாதார பயணியாளர்களை பயன்படுத்தி பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

3273 total views