முதல்முறை பாதித்த பகுதிகளில் கொரோனா 2ஆவது அலையாக தாக்க வாய்ப்பு...WHO எச்சரிக்கை!

Report

ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதை சுட்டிக்காட்டி, முதல்முறை பாதிப்பு ஏற்பட்ட அனைத்து இடங்களிலும், 2-வது அலையாக கொரோனா தாக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு உலக அளவில் நேற்று முன்தினம் 50 லட்சத்தையும், நேற்று 51 லட்சத்தையும் தாண்டியதை உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தவகையில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு நாளில் மிக அதிகபட்ச கொரோனா பாதிப்பு இது எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் ரஷ்ய வானொலிக்கு அதன் செய்தித் தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் அளித்த பேட்டியில், கொரோனா தொற்று இன்னும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், முதல்முறை பாதித்த அனைத்து இடங்களிலும், 2-வது அலையாக தாக்கும் வாய்ப்பு இருக்கிறதென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3300 total views