பாகிஸ்தான் பங்கு பரிவர்த்தனை நிலையம் மீது தாக்குதல்- இருவர் பலி

Report

பாகிஸ்தான் – கராச்சியிலுள்ள பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று காலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸாரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ஆயுததாரிகள் கிரனேட்டுக்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பங்கு பரிவர்த்தனை நிலையம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ளது என்பதுடன், அங்கு வீடுகளும் தனியார் வங்கிகள் பலவற்றின் தலைமையகங்களும் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் பாதுகாப்புப் படைவீரருக்கும் காயமேற்பட்டுள்ளது

939 total views