உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி... குளத்தில் குளித்தபோது முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்

Report

கம்போடியாவில் ஆடையின்றி குளத்தில் குளித்த முதியவர் உடல் வழியே அட்டை பூச்சி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியில் உள்ள முதியவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளத்தில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. வலியில் அவதியுற்ற அந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் முதியவரின் சிறுநீர்ப்பையில் சிறிய கேமரா கொண்டு நுழைத்து பார்க்கையில் அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்தமை தெரியவந்தது.

குளத்தில் ஆடையின்றி குளித்த போது அவரின் உறுப்பு வழியே அந்த அட்டைப் பூச்சி சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த அட்டை பூச்சியானது முதியவரின் உடலில் இருந்து சுமார் 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சி விட்டதால், அந்த அட்டைப்பூச்சியை வெளியேற்றுவதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும் மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு அட்டைப்பூச்சியை வெளியேற்றி உள்ளனர்.

இந்த நிலையில் கம்போடியாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஆச்சர்யமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல என்ரும், கடந்த 2018 ஆம் ஆண்டில், சீனாவின் நெய்ஹைர் நகரில் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து அட்டைப்பூச்சி வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளமையும் இங்கு குரிப்பிடத்தக்கது.

2414 total views