கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்கள் மீதான சோதனை வெற்றி என ரஷ்ய அறிவிப்பு

Report

கொரோ‌னா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான மருந்தை இதுவரை எந்தவொரு நாடும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால் அதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் பல நாடுகளில் முதல்கட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அனைத்தும் சோதனையில் உள்ளன. ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு வரும். அந்த வகையில் பல கொரோனாவுக்கான மருந்துகளும் சோதனைக் கட்டத்தில் உள்ளன.

இந்நிலையில் கொரோ‌னா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த சொசோனோவ் பல்கலைக்கழகம் இந்த தடுப்பு மருந்தை ‌கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ள‌து.

இதன்மூலம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் தேதி இதற்கான சோதனை தொடங்கப்பட்டதாகவும், இவை வெற்றிபெற்றதால் முதல் குழுவினர் நாளை மறுநாளும், இரண்டாம் குழுவினர் 20ஆம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர்.

இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள Gamalei Institute of Epidemiology and Microbiology என்ற நிறுவனம் தய‌ரித்துள்ளது.‌ இந்த மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3838 total views