அக்டோபர் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி!

Report

அக்டோபர் மாதம் முதல் ரஷ்யாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,013,189 ஆக உயர்ந்துள்ளதுடன் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 688,718 ஆக உள்ளது.

அதோடு கொரோனாவால் குணமடைந்தவர் எண்ணிக்கை 11,326,433 ஆக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்கா வழக்கம் போல ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது

6749 total views