காட்டுக்குள் மாயமான இளம்யுவதி: 9 நாட்களுக்கு பிறகு பொலிசார் கண்ட காட்சி

Report

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் இளம் யுவதி ஒருவர் திடீரென்று மாயமான நிலையில், மீட்புக்குழுவினர் 9 நாட்களுக்கு பின்னர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

வாஷிங்டன் மாகாணத்தில் பெற்றோருடன் குடியிருக்கும் 18 வயது ஜியோவானா என்பவரே காருடன் தேநீர் அருந்த வெளியே சென்ற நிலையில் மாயமாகியுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி இவர் பெற்றோறிடம் ஏதும் கூறாமல் வெளியே சென்றுள்ளார். எனினும் இரவும் ஜியோவானா குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், கவலையடைந்த பெற்றோர், பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த மீட்புக்குழுவினர், அவர் மாயமான அடுத்த நாள் பிராதான சாலையில் கைவிடப்பட்ட நிலையில் அவரது காரை கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் தொடர்ந்து ஒருவாரமாகியும் ஜியோவானா தொடர்பில் எந்த தகவலும் இல்லாமல் தேடுதல் நடவடிக்கை மட்டும் நீண்டுள்ளது.

இதனையடுத்து பொலிசார் , தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியதுடன் விசாரணையையும் முன்னெடுத்தனர்.

அதோடு யுவதியின் மொபைல்போனும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளது.

இந்த நிலையில், சியாட்டில் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருந்து நீண்ட 9 நாட்களுக்கு பின்னர் அவரை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சரியான உணவு மற்றும் தூக்கமின்றி மிகவும் சோர்ந்த நிலையில், பயத்துடன் அவர் காணப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஓடை நீரும் காட்டுப்பழங்களும் சாப்பிட்டு அவர் உயிர் பிழைத்ததாக கூறும் பொலிசார், தற்போது எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் , தற்போது மருத்துவ சிகிச்சை அவருக்கு தேவை எனவும், பூரண குணமடைந்த பின்னர் அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தமது காருக்கான எரிபொருள் நிலையத்தை தேடி சென்றதில், அவர் வழி தவறியதாக கூறப்படுகிறது. மொபைல்போனும் வேலை செய்யாத நிலையில், காட்டுக்குள் தனியாக ஜியோவானா சிக்கியுள்ளார் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

5546 total views