இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம்; இணையத்தில் வைரல்

Report

தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று இவ்வருடத்தின் சிறந்த புகைப்படமாக அனைவராலும் விரும்பி பகிரப்பட்டு வருகிறது.

துபாயில் இருந்து வெளியானப் புகைப்படம் ஒன்று இன்று உலகளவில் வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் அப்போதுதான் பிறந்துள்ள குழந்தை மருத்துவர் சமீர் செயிப்பின் மாஸ்க்கை இழுத்துப் பிடித்த படி அழுதுக் கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள மருத்துவர் ‘அனைவரும் இந்த மாஸ்க்கை கைவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

இதேவேளை கொரோனா அச்சத்தால் உலகமக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகியுள்ளது.

இந்நிலையில் மருத்துவரின் இப்பதிவு பலரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

1343 total views