உலகப்புகழ் பாடிபில்டர் லாரி வீல்ஸை தோற்கடித்த 70 கிலோ இந்தியர்

Report
142Shares

ஆர்ம் ரெஸ்ட்லிங் சாம்பியன்ஸ்’ போட்டியில், உலகப்புகழ் பெற்ற பாடிபில்டர் லாரி வீல்ஸ் உடன் மோதிய, 70 கிலோ எடை மட்டுமே கொண்ட இந்தியர் ராகுல் பனீக்கர், அவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

உலக புகழ்பெற்ற பாடி பில்டர்களில் ஒருவர் லாரி வீல்ஸ். இவரது கட்டுடல், பரந்து விரிந்த ஆர்ம்ஸ் காரணமாக சமூக வலைதளங்களில் இவரை பின்பற்றுபவர்கள் ஏராளம்.

ஆறு அடிக்கும் மேல் உயரம் கொண்ட இந்த அமெரிக்கர், சுமார் 115 கிலோ எடை உடையவர். இவர் பவர் லிப்டிங்கில் எண்ணற்ற சாதனைகளை தன் கைவசம் வைத்திருக்கிறார்.

இவர் ஸ்குவாட் பிரிவில் 367 கிலோ எடை, பெஞ்ச் பிரஸ் பிரிவில் 276 கிலோ எடை, டெட்லிப்டில், 387 கிலோ எடை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

ஜிம்மில் தனது உடற்பயிற்சி வீடியோக்களையும், ஆர்ம் ரெஸ்ட்லிங் போட்டியையும் தனது யூடியூப் சேனலில் வீஸ்ஸ் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் 70 கிலோ எடை கொண்ட ராகுல் பனீக்கர் என்ற இந்தியரிடம், ஆர்ம் ரெஸ்ட்லிங் சாம்பியன்ஸ் போட்டியில், வீல்ஸ் மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மலைக்கும் மடுவுக்குமான போட்டியாக இது இருக்கும் என எண்ணி, ஏமாந்து போனவர்கள் தான் அதிகம். முதல் இரு சுற்றுகளில் தோற்று 2 – 0 என பின்தங்கிய ராகுல், அடுத்த 3 சுற்றுக்களையும் அடுத்தடுத்து வென்று ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார்.

முடிவில் 3 – 2 என அவர் இப்போட்டியில் வென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்ஜினியரான ராகுல், விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரது தந்தை முன்னாள் பழுதூக்குதலில் சாம்பியனாக இருந்துள்ளார். தந்தையின் உத்வேகத்தால், உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்த இவர், தற்போது லாரி வீல்ஸை தோற்கடித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

6576 total views