வெடித்த வன்முறை... நியூ கலிடோனியாவில் 02 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமுல்!
பிரான்ஸில் உள்ள நியூ கலிடோனியாவில் 02 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக சுதந்திரம் தேடும் பழங்குடியின மக்களுக்கும் பிரான்ஸின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் காலனித்துவவாதிகளின் சந்ததியினருக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறைகளின் விளைவாக இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நியூ கலிடோனியாவில் வாக்களிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சீர்திருத்தங்கள் குறித்து பிரான்ஸ் சட்டமியற்றுபவர்கள் விவாதித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இது தற்போது வன்முறையாக உருவெடுத்துள்ளது. குறித்த வன்முறையின் போது 82 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 54 பொலிஸார் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் குழுவாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளதுடன், விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.