நியூயோர்க்கில் ஆசிய நாட்டவர்கள் சென்ற சுற்றுலா சென்ற பேருந்து விபத்து; 5 பேர் பலி ..பலர் படுகாயம்
அமெரிக்காவின், மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த பஸ்ஸில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று விட்டு நியூயோர்க் நகருக்கு திரும்புகையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகள்
பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நியூயோர்க் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பல பயணிகள் பஸ்ஸிற்குள் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதாகவும், பலர் சீட் பெல்ட் அணியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ரொசெஸ்டர், பஃபலோ வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கூறுகையில்,
"இந்த துயரமான பஸ் விபத்து குறித்து நான் அறிந்தேன். மீட்பு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக மாநில பொலிஸார் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.