ஒன்டாரியோ மாகாணத்திற்கு கிடைக்கப்பெறும் அதிஸ்டம்
ஒன்டாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்புக்களில் ஆறு தடவைகள் ஜாக்பாட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் லொத்தர் சீட்டின் மூலம் மேலும் ஒருவருக்கு 40 மில்லியன் கனேடிய டாலர் பெறுமதியான லாட்டோ மேக்ஸ் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இந்த வெற்றி சீட்டு கிரே கவுண்டி (Grey County) எனப்படும் பகுதியில் விற்கப்பட்டுள்ளது. இப்பகுதி ஓவென் சவுண்ட், மீஃபோர்ட், ப்ளூ மவுண்டன், பிளெஷர்டன், டர்ஹாம், ஹானோவர் போன்ற நகரங்களை உள்ளடக்கியது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீட்டிலுப்பில் வெற்றி எண்கள்: 06, 14, 17, 19, 26, 43, 45 + 27 (போனஸ்) எனும் எண்களாகும்.
இந்த சீட்டிலுப்பில் பங்குபற்றிய அனைவரும் தங்களது சீட்டுகளை ஆப் அல்லது லாட்டரி விற்பனை நிலையங்களில் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சிறிய பரிசுகளுக்குக் கூட தாங்கள் தகுதியுடையவர்களா என்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ளது. 2025ஆம் ஆண்டில் இதுவரை ஒன்டாரியோவில் ஆறு முறை லாட்டோ மேக்ஸ் ஜாக்பாட் வெற்றிகள் பதிவாகியுள்ளன:
• ஜனவரி 21 – டொரோண்டோவில் விற்கப்பட்ட $60 மில்லியன் சீட்டு
• ஜனவரி 31 – வில்லோடேல் பகுதியில் விற்கப்பட்ட $25 மில்லியன் சீட்டு
• பிப்ரவரி 21 – ஓஷாவாவில் விற்கப்பட்ட $40 மில்லியன் சீட்டு
• மார்ச் 28 – நியூமார்கெட்டில் விற்கப்பட்ட $65 மில்லியன் சீட்டு
• ஆகஸ்ட் 19 – கிங்ஸ்டனில் விற்கப்பட்ட $75 மில்லியன் சீட்டு
• அக்டோபர் 28 – கிரே கவுண்டியில் விற்கப்பட்ட $40 மில்லியன் சீட்டு இதற்குமுன், கிங்ஸ்டன் நகரத்தைச் சேர்ந்த டேவிட் ஹாட் எனும் இரு குழந்தைகளின் தந்தை ஆகஸ்ட் 19ஆம் திகதி நடைபெற்ற சீட்டிலுப்பில் 75 மில்லியன் டொலர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.