நூறு ஆண்டுகளின் பின்னர் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!
மேற்குத் அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் (Esperance) பகுதியில் உள்ள வார்டன் கடற்கரையில் நூற்றாண்டுக்கு மேலாக புதைந்திருந்த ஒரு போத்தலில் இருந்த கடிதங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த போத்தல் , 1916 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி மால்கம் நெவில் (Malcolm Neville) மற்றும் வில்லியம் ஹார்லி (William Harley) என்ற இரு அவுஸ்திரேலிய படைவீரர்கள் எழுதியவை. அவர்கள் அப்போது முதல் உலகப் போரில் பிரான்ஸ் போர்க்களத்துக்குச் செல்லும் கப்பலில் இருந்தனர்.
இந்த போத்தலை, டெப் ப்ரவுன் (Deb Brown) என்ற பெண் தனது கணவர் பீட்டர் மற்றும் மகள் பெலிசிட்டியுடன் கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, அக்டோபர் 9ம் திகதி கண்டுபிடித்தனர்.

போத்தலுக்குள் இருந்த கடிதங்கள், பென்சிலால் எழுதப்பட்டிருந்தன. இருவரும் HMAT A70 Ballarat என்ற கப்பலில் இருந்தனர்.
நெவில் ஒரு ஆண்டுக்குப் பிறகு போரில் உயிரிழந்தார்; ஹார்லி இருமுறை காயமடைந்தபோதும் உயிர் பிழைத்து, 1934ல் புற்றுநோயால் உயிரிழந்தார்.