அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்
அமெரிக்காவிற்கு பிரவேசிக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கையை மிகக் கடுமையாக குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் 2026 ஆம் நிதியாண்டிக்கு மொத்தம் 7500 பேருக்கு மட்டும் ஏதிலி அந்தஸ்து வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு குறைந்த தொகை ஆண்டு ஒன்றுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஏதிலிகள் எண்ணிக்கையை வரையறுப்பது குறித்து பிரச்சாரம் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஏதிலிகளின் எண்ணிக்கையை மிகக் கடுமையாக வரையறுப்பதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.
இதன் ஒரு சட்டமாக அடுத்த ஆண்டில் நாட்டிற்குள் பிரவேசிக்கக்கூடிய ஏதிலிகளின் எண்ணிக்கை வெறும் 7500 என நிர்ணயிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு ஏதிலி அந்தஸ்து வழங்கப்படுவோரில் தென்னாபிரிக்க வெள்ளை இனத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்கள் கருப்பினத்தவர்களால் ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதனால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி ட்ராம் தெரிவித்துள்ளார். ஏதிலிகள் குறித்த கட்டுப்பாடுகள் மிக தீவிரம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஏதிலிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் கட்டுப்படுத்தப்படும் எனவும் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1980 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவில் முதல் தடவையாக மிகக் குறைந்த அளவு ஏதிலிகள் அடுத்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் பதவி வகித்த இறுதி ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏதிலிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த நடவடிக்கை குறித்து மனித உரிமை அமைப்புகள் கடும் விமர்சனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        