ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,189 பேர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் 40,443 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,189 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 86 இலட்சத்து 33ஆயிரத்து 643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2இலட்சத்து 42ஆயிரத்து 060 பேர் மரணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 9 இலட்சத்து 46ஆயிரத்து 145 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,807 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 74இலட்சத்து 45 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது.