கனடாவில் ஒரு டொலரின் மூலம் கிடைத்த அதிஸ்டம்
கிங்ஸ்டன் பகுதியில் வசிக்கும் 76 வயதான ஓய்வுபெற்ற லிண்டா கோயில் என்ற பெண், ஒரு டொலர் லாட்டோ மேக்ஸ் என்கோர் (Lotto Max Encore) லொத்தர் சீட்டு மூலம் ஒரு லட்சம் டொலர் பணப் பரிசு வென்றுள்ளார்.
ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கழகம் (OLG) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சட்ட ரீதியாக வயது வந்தவர் என்ற வயதெல்லையை அடைந்த நாள் முதல் தாம் லொத்தர் சீட்டிலுப்புக்களில் பங்கேற்று வருவதாகவும் இதுவே முதல் வெற்றி எனவும் லிண்டா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் லொத்தர் சீட்டுக்கள் கொள்வனவு செய்வதனை வழமையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
லொத்தர் சீட்டில் வென்னெடுக்கப்பட்ட பரிசுத் தொகை தொடர்பில் தாம் நம்பிக்கை ஏற்படவில்லை எனவும் பல தடவைகள் விழுந்த தொகையை சரி பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பரிசு வென்றமை தொடர்பில் கூறிய போது எவரும் அதனை நம்பவில்லை எனவும் இதனை நகைச்சுவையாக முதலில் அனைவரும் எடுத்துக் கொண்டனர் எனவும் ஆனால் உண்மையென்று உணர்ந்ததும், அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்" என தனது குடும்பத்தவர்கள் பற்றி தெரிவித்துள்ளார்.
இந்த பரிசுத் தொகையை, வீட்டில் பழுது பார்க்க, மக்களுடன் பகிர்ந்து கொள்ள, மேலும் சிறிது தொகையை சேமிக்க, மற்றும் சிறிய விடுமுறைப் பயணத்திற்கும் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.