சீன மின்சார வாகனங்களுக்கான வரியை நீக்குவது குறித்து கனடா அவதானம்
சீன மின்சார வாகனங்களுக்கான வரியை நீக்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடடிய விவசாய அமைச்சர் ஹீத் மெக்டொனால்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீன மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகளை நீக்குவது அல்லது தளர்த்துவது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
ஆனால், இதற்கான முடிவில் விவசாயம் உள்ளிட்ட பிற துறைகளின் பாதிப்புகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், சீனாவிடம் இருந்து இதுவரை தெளிவான கோரிக்கை எதுவும் வராததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.
வரி குறைப்பு அல்லது வரி நீக்கம் தொடர்பில் நுணுக்கமாக ஆராயப்பட்டு வருவதாகவும் ஆனால் விவசாயிகளை ஆதரிப்பதே முதன்மை நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
2024 அக்டோபரில் கனடா அரசு, உள்ளூர் உற்பத்தியாளர்களை சீனாவின் அநியாய வர்த்தக நடைமுறைகளிலிருந்து காக்கும் வகையில் 100% இறக்குமதி வரி விதித்தது.
ஆனால் அதன்பின் கனடாவின் மின்சார வாகன சந்தை பல சவால்களை சந்தித்து வருகினு்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் மின்சார வாகனங்களின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.