வீடுகளுக்கு தீ ; ஹெலிகாப்டரில் தொங்கி உயிர் தப்பிய அமைச்சர்கள், வைரலாகும் வீடியோ
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைரலாகும் வீடியோ
போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச் சென்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
தகவலறிந்து விரைந்த ராணுவம் ஹெலிகாப்டரில் அங்கு சென்று கயிறுகளை வீசியது. கயிறுகளைப் பிடித்துக் கொண்டு அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
Politicians escaping the wrath of the people in Nepal
— NeZZar (@lagos_fineboy) September 10, 2025
God when?
pic.twitter.com/16mIKiS1Qu