சீன ஜனாதிபதியை சந்திக்கும் கனடிய பிரதமர்
எதிர்வரும் வாரம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் சீ ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையேயான வணிக உறவுகள் மட்டுமின்றி, உலக பொருளாதார அமைப்பின் மாற்றங்களையும் விரிவாக விவாதிக்கவுள்ளதாக கார்னி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு, கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சமீபத்தில் பீஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்ததைத் தொடர்ந்து நடைபெறுகின்றமை குறிப்பிடத்தகக்து.

இரு நாடுகளுக்கிடையேயான உறவை மீள அமைக்கும் புதிய கட்டத்திற்குள் நாங்கள் நுழைந்து கொண்டிருக்கிறோம் என கார்னி மலேசியாவில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது, 2017ஆம் ஆண்டு அப்போதைய கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனாவுக்கு செய்த உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர், இரு நாடுகளின் தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தகக்து.
2018 டிசம்பரில், ஹுவாவே நிறுவனத்தின் உயர் அதிகாரி மேங் வான்சோவை அமெரிக்க கோரிக்கையின் பேரில் கனடிய அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.