பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி
பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர்.
சாலொ பாலோ மாகாணத்தில் அமைந்துள்ளது சுற்றுலா நகரமான கிராமடோ. இந்நிலையில், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
கோடீஸ்வரர் குடும்பத்தினருடன் பலி
இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்தது. கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்த விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
அதேவேளை வீட்டில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய விமானம் கட்டிடத்தின் புகைபோக்கி மீது மோதியது வீடு கடையொன்றின் மீது விழுந்து நொருங்கியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் விழுந்து நொருங்கியதால் வீடு கடைகளில் இருந்த 17 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த கோடீஸ்வரர் தனது குடும்பத்தினருடன் பயணித்துக்கொண்டிருந்தார் விமானத்தில் இருந்த அவரது குடும்பத்தவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
மோசமான காலநிலையிலேயே விமானம் பயணித்தது என தகவல்கள்வெளியாகியுள்ளன.
இதேவேளை பிரேசிலில் நேற்றையதினம் லாரி மீது பஸ் மோதியதில் 37 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.