லண்டனில் பரபரப்பை ஏற்படுத்திய 10 அடி உயர மர்ம உலோகம்
லண்டனின் வேல்ஸ் நகரில் உள்ள ஹே-ஆன்-வே பகுதியில் உள்ள ஒரு மலையில் சமீபத்தில் ஒரு பிரமாண்டமான உலோக மோனோலித் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அதில் சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த உலோகம் மாபெரும் டோப்லெரோன் (ஒரு வகை சாக்லேட்) போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.
இணையத்தில் விவாதம்
இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன என்பது குறித்து கேள்விகளை கேட்டதால் இணையத்தில் அந்த உலோகம் விவாதமாகவே மாறியது. இது குறித்து ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் ஹெய்ன்ஸ் என்பவர் கூறுகையில்,
இது சற்று வினோதமானது. மலை நீரை சேகரிக்கும் அறிவியல் ஊடக ஆராய்ச்சி விஷயமாக இருக்கலாம். ஆனால் இது மிகவும் உயரமானது மற்றும் விசித்திரமானது. குறைந்த பட்சம் 10 அடி உயரமாகவும், முக்கோண வடிவமாக இருப்பதையும் பார்த்தேன்.
கண்டிப்பாக இது துரு பிடிக்காத உலோகம் ஆகும் என்றார்.
அதேவேளை வைரலான மோனோலித்தின் படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கலாம் எனவும் பதிவிட்டனர்.