லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் சைபர் தாக்குதல்
இங்கிலாந்தில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களின் தனிப்பட்ட தரவு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விமானங்களுக்கு தரை கையாளுதல் சேவைகளை வழங்கும் இன்ஃப்ளைட் தி ஜெட் சென்டர் சைபர் பாதுகாப்பு சம்பவத்தை சந்தித்ததை அடுத்து, 3,700 ஆப்கானியர்களின் பெயர்கள், பாஸ்போர்ட் தகவல்கள் மற்றும் ஆப்கான் இடமாற்றங்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தாலிபானிடமிருந்து தப்பிச் செல்ல இங்கிலாந்துக்கு வரக் கோரிய கிட்டத்தட்ட 19,000 பேரின் விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் “தனிநபர்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை, அல்லது எந்த அரசாங்க அமைப்புகளையும் சமரசம் செய்யவில்லை” என்று அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.