இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட போதைப்பொருள் ; கனடாவில் ஒருவர் கைது
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட போதைப் பொருளுடன் கனடாவில் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நான்கு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து டொரோண்டோவுக்கு வந்த ஒரு பொதியில் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அந்தப் பொதியிலிருந்த பொருள் ஒட்டாவா நகரின் மெடேவ்லென்ட்ஸ் வீதி பகுதியில் உள்ள முகவரிக்கு அனுப்பப்படுவதாக இருந்தது.
இதையடுத்து, ஒன்றாரியோ பொலிஸார் மற்றும் கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த 24 திகதி அந்த முகவரியில் தேடுதல் நடத்தி, ஒருவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் 33 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.