கரீபியன் பிராந்திய நாடுகளுக்கு உதவும் கனடா
கரீபியன் பிராந்திய நாடுகளை தாக்கிய மெலிசா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்கு எதிராக, கனடா அரசு 7 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.
தேவைப்பட்டால் படை வீரர்களையும் அனுப்ப தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கடினமான தருணத்தில் கரீபியன் மக்களுடன் கனடா சொற்களால் அல்ல, செயல்களால் நிற்கிறது என சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ரன்தீப் சராய் தெரிவித்துள்ளார்.
நாளையும் நாங்கள் அவர்களுடன் இருப்போம் — மேலும் பாதுகாப்பான, வலுவான சமூகங்களை மீண்டும் உருவாக்க உதவுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மெலிசா சூறாவளி, நிலப்பரப்பை அடைந்தது. 5-ஆம் வகை புயலான இது, ஜமைக்கா, கியூபா, ஹெய்டி உள்ளிட்ட நாடுகளில் பலர் உயிரிழந்தனர்.
கடுமையான கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டதுடன் மின் விநியோக தடங்கல்களும் ஏற்பட்டன.
வியாழக்கிழமை காலை வரை எந்த கனேடியரும் காணாமல் போனதாகவோ உயிரிழந்ததாகவோ தகவல் இல்லை என்று சராய் தெரிவித்துள்ளார்.