வெளிநாடொன்றில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினேம் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தோண்டப்பட்டு வந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது.
தங்கம் எடுப்பதற்காக அங்குள்ள சிலரால் சட்டவிரோதமாக குறித்த சுரங்கம் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக உறுதியற்ற பல விடயங்கள் இருப்பதாக சுரினேம் அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், "சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது" என்றும் தெரிவித்துள்ளார்.
சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளது.