ஆஸ்திரேலியாவில் 10 லட்சத்தை கடந்த பாதிப்பு; இன்றுமுதல் சிறுவர்களுக்கும் தடுப்பூசி
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 10 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம், ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது.
ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, அந்நாட்டில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வகை தொற்று வேகமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் ஆஸ்திரேலியாவில் , 5 முதல் 11 வயது வரையிலான வரம்பில் 23 லட்சம் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 6 ஆயிரம் முகாம்கள் செயல்படுவதாகவும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.
இதேவேளை , சிட்னி, கேன்பர்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அழைத்து சென்று தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.