கனடாவின் பிரதான வீதிகளில் இராணுவம் குவிப்பு! ஏன் தெரியுமா
கனடாவின் பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டொராண்டோ மற்றும் ஒன்டாரியோ முழுவதுமான அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான படையினரை அவதானிக்க முடியும் என கனேடிய ஆயுதப் படைகள் (CAF) அறிவித்துள்ளது.
வாகன வாரதிகள் அதிகளவான படையினரை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.
சுமார் 1,500 கனேடிய இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது உருவகப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு “முக்கிய” பயிற்சி நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நேற்றைய தினம் இராணுவத்தின் பிரசன்னம் வீதிகளில் அதிகமாக காணப்பட்டதாகவும் இன்றும் இந்த நிலைமை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.