கொலம்பியாவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி
கொலம்பியாவில் கால்பந்து மைதானம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக கிளச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிற போதிலும் ஆர்ஜெலியா நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த மைதானம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புரட்சிகர ஆயுதப்படை அமைப்பு பொறுப்பேற்று . இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.