சுவிஸில் கடந்த 24 மணிநேரத்தில் இத்தனை பேர் கொரோனாவால் பலியா?
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 1,721 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதோடு 10 பேர் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8 இலட்சத்து 72 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11ஆயிரத்து 245 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 33 ஆயிரத்து 280 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை தொற்றால் பாதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை மையங்களில் 91 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிஸில் கடந்த 24 மணிநேரத்தில் 1,447 பேர் தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அந்நாட்டில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8இலட்சத்து 28 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது.