மதுபானசாலை உரிமையாளர் பிள்ளைகள் உட்பட 10 பேர் கொலை
மொன்டினீக்ரோவில் (Montenegro) நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
செட்டின்ஜே என்ற நகரத்தில் மதுபானசாலையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தில் வெளிப்பட்ட ஆத்திரம்
சம்பவத்தில் 45வயதான அகொமார்ட்டினொவிக், முதலில் மதுபானசாலை உரிமையாளரை அவரது பிள்ளைகளை குடும்பத்தினரை கொலை செய்துள்ளார் என மொன்டினீக்ரோவின் (Montenegro) உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை தற்கொலை செய்ய முயன்றார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் வெளிப்பட்ட ஆத்திரம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மையின் அளவை பார்க்கும்போது இவர்கள் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஆபத்தானவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுபானசாலையில் மோதல் இடம்பெற்றவேளை மார்ட்டினொவிக் மதுபானசாலையில்காணப்பட்டார், அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் துப்பாக்கியுடன் வந்து வன்முறையில் ஈடுபட்டார் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதலில் மதுபான சாலையில் அவர் மூவரை கொன்றார்,அதன் பின்னர் வேறு மூன்று இடங்களில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்,மேலும் நால்வரை கொலை செய்ய முயன்ற அவர் அதன் பின்னர் துப்பாக்கியுடன் தப்பியோடினார் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த கொடூர வன்முறையில் ஈடுபட்ட நபர் ஆயுதங்களை வைத்திருந்தமைக்காகவும் வன்முறைகளில் ஈடுபட்டமைக்காகவும் சிறைத்தண்டனை பெற்றவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.