கனடா வருமான முகவர் நிறுவனத்தில் 370 ஊழியர்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு
கடந்த ஆண்டில் கனடா வருமான முகவர் நிறுவனம் (Canada Revenue Agency – CRA) ஊழியர்களின் ஒழுங்கீன செயல்பாடுகள் தொடர்பாக 370 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவங்களில் மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறுதல், வேலை நேர திருட்டு, பணியிடத்தில் ஒழுங்கற்ற நடத்தை மற்றும் வரிவிதானத் தகவல்களை அனுமதியின்றி அணுகுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த 370 ஒழுங்கீன சம்பவங்களில் 266 சம்பவங்களுக்கு ஊழியர் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் 25 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 150-க்கும் மேற்பட்டோர் சம்பளம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலாக, கொவிட்-19 காலத்தில் வழங்கப்பட்ட கனடா அவசர உதவி நிதி (CERB) உதவித்தொகையை மோசடியாக விண்ணப்பித்து பெற்றதாக கண்டறியப்பட்ட 78 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2023 ஜூன் மாதத்திலிருந்து தவறான பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணைகள் தொடங்கியதிலிருந்து, 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.