ஒரே வீட்டில் 100 பாம்புகள்...அதிர்ச்சியில் உறைந்த பாம்புபிடி வீரர்
அமெரிக்காவில் வீடொன்றில் 100 விஷப்பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் நொர்தேர்ன் கலிபோர்னியாவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சுமார் 100 விஷ பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பில் வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் பாம்பு பிடியில் வல்லவரான அல் உல்புக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி குறித்த வீட்டிற்கு சென்ற அவர் அங்கு 100 க்கும் அதிகமான விஷ பாம்புகள் வீட்டின் அடிப்பகுதியில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் 59 குட்டிப்பாம்பும், 22 பெரிய பாம்புகளும் வீட்டில் இருந்துள்ளன. இதனையடுத்து அனைத்து பாம்புகளையும் பிடித்தார் பாம்பு பிடி வீரர். அதுபற்றி அவர் கூறியதாவது, "நான் 32 வருடமாக பாம்பு பிடி பணியை செய்து வருகிறேன்.
நான் ஒரு வீட்டில் அதிகபட்சமாக பிடித்த பாம்புகள் எண்ணிக்கை 5 தான்.
ஆனால் இந்த வீட்டில் இதனை பாம்புகள் இருக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்க வில்லை.
வீட்டின் அஸ்திவாரம் போடும் போதே இந்த பாம்புகள் இங்கு வந்திருக்கலாம்": என அவர் தெரிவித்தார்.