ஒரே நாளில் 1000 அமெரிக்க Gold Card Visa விற்பனை
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்டு கார்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற Gold Card Visa (தங்க அட்டை விசா) திட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தார். இந்த விசா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
விசா திட்டத்துக்கு அமோக வரவேற்பு
இந்த கோல்டு கார்டு விசாவில், கிரீன் கார்டு விசாவை விட அதிக சலுகைகள் உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கருத்து தெரிவிக்கையில்,
டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்டு கார்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோல்டு கார்டு வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்பதாகவும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.