அச்சுறுத்தும் கொரோனா; 5 நாட்களில் 11,500 விமானங்கள் ரத்து!
கிறிஸ்மஸ் வார இறுதியில் உலகெங்கும் விமானப் பயணங்களில் உண்டான பாதிப்பு திங்களன்றும் தொடர்ந்த நிலையில் 5 நாட்களில் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல லட்சம் பேர் தங்கள் பணியிடம் உள்ள ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை உலக அளவில் உண்டாகியுள்ளது. அந்தவகையில் வெள்ளிக்கிழமை முதல், உலகெங்கும் சுமார் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பத்தாயிரம் விமானங்களின் புறப்பாட்டு நேரமும் தாமதமாகியுள்ளதாக அந்த தக்லவல்கள் கூறுகின்றன.
அதேவேளை திங்கட்கிழமை மட்டும் சுமார் 3,000 விமானங்கள் ரத்தாகி நிலையில் இன்று 1100க்கும் அதிமான விமானங்கள் இதுவரை ரத்தாகியுள்ளதாக ஃப்ளைட்அவேர் எனும் விமானப் பயணம் குறித்த தகவல்களைத் தரும் இணையதளம் கூறுகிறது.