இரண்டு வாரங்களாகக் காணாமல் போன 11 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!
கனடாவின் கல்கரி நகரத்தில் கடந்த இரண்டு வாரங்களாகக் காணாமல் போன 11 வயதுச் சிறுவன் பார்க்கர் வெல்ஸ், புதன்கிழமை வடகிழக்கு நகரப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று மிகவும் கடினமான ஒரு நாள் என பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 16 ஆம் திகதி காலை 11:00 மணியளவில் பார்க்கர் வெல்ஸ் காணாமல் போனார்.

நூற்றுக் கணக்கான பொலிஸார், மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களில் ஒருவர் கண்டெடுத்த சிறுவனின் ஆடை ஒன்று, பொலிஸாரைத் தேடுதல் வழியில் வழிநடத்தியது.
'டீர்ஃபுட் ட்ரெயில்' பகுதியிலுள்ள நிலத்தடி நீர் வடிகால் குழாய்களின் சிக்கலான வலைப்பின்னலுக்குள் சிறுவன் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சுமார் 450 முதல் 500 அடிகள் ஆழத்திலிருந்த மிகச் சிறிய குழாய் ஒன்றுக்குள்ளிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேடுதல் பணியில் ஈடுபட்ட கல்கரி பொலிஸ் துறை, தீயணைப்புத் துறை மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.