பனாமாவிற்கு நாடுகடத்தப்பட்ட 12 இந்திய நாடு திரும்பினர்
அமெரிக்காவில் இருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள், நேற்று (பிப்ரவரி 23) இரவு டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவால் பனாமாவிற்கு நாடுகடத்தப்பட்ட 299 சட்டவிரோதக் குடியேறிகளில் இந்த 12 இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பினர்
அமெரிக்காவில் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை அவரவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் மூன்று வெவ்வேறு விமானங்களில் ஏற்கெனவே 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாடு திரும்பிய இந்தியர்கள் அனைவரும் சட்டவிரோதப் பயண முகவர்களுக்கு பெரும் தொகையைச் செலுத்தியதாக சாக்சி சாவ்னி மேலும் கூறினார். சட்டவிரோத இந்தியக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதுகுறித்து பஞ்சாபில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர்.
அதேவேளை அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் தனது நாட்டினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.