உலகை உலுக்கிய மற்றுமொரு விமான விபத்தில் 12 பேர் பலி; உயிர் பிழைத்த ஐவர்
மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமான விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
17 பயணிகளுடன் சென்ற விமானம்
விமான விபத்தில் பிரபல இசைக்கலைஞர் உட்பட 12 பேர் பலியானதாக கூறப்படுகின்றது.
ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள ரோவாடான் என்ற தீவிலிருந்து லான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று 17 பயணிகளுடன் திங்கட்கிழமை இரவு புறப்பட்டு லா சீபா நகரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது.
கடலுக்கு மேலே செல்லும்போது நிலை தவறிய விமானம் கடலில் விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக விமானம் விழுந்த இடத்திற்கு சென்று ஒருசிலரை மீட்டுள்ளனர்.
விபத்தில் பிரபல இசைக்கலைஞரான ஆரேலியா மார்டினெஸ் சுவாஜோவும் பலியானார். விமானம் முழு உயரத்தை எட்ட முடியாமல் விபத்தில் சிக்கி கடலுக்கு மூழ்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விமான விபத்து பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.