கண்ணீர் விட்டழுத வட கொரிய அதிபர் கிம்; வியப்பில் உலக மக்கள்
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட்டு உயிரிழந்த வீரர்களுக்கு வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் கண்ணீர் அஞ்சலி செலுத்தியமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிம் ஜாங்-உன், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட்டு நாடு திரும்பிய ராணுவ வீரர்களைக் கட்டித் தழுவி, அவர்களுக்குப் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சி பியொங்யாங் (Pyongyang) நகரில் நடைபெற்றது. உயிரிழந்த வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு நினைவுச் சுவரின் முன், கிம் (kneeling) மரியாதை செலுத்தினார்.
தென் கொரிய உளவுத்துறை தகவல்களின்படி, ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட சுமார் 15,000 வட கொரிய வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் சுமார் 600 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .
இந்த அரிய பொது நிகழ்ச்சியின்போது, போரில் உயிரிழந்த வீரர்களுக்கு ஜாங்-உன் கண்ணீர் கண்ணீர் அஞ்சலி செலுத்தியமை உலகை வியப்புள்ளாகியுள்ளது.